வீட்டில் தனியாக இருந்த பிளஸ் 1 மாணவிக்கு பாலியல் தொல்லை : போக்சோவில் வாலிபர் கைது..!!
Author: Babu Lakshmanan19 August 2022, 10:24 am
வேலூரில் வீட்டில் தனியாக இருந்த பிளஸ் 1 மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
வேலூர் மாவட்டம் காட்பாடியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். இவர்களது உறவினர்கள் சேண்பாக்கத்தில் வசிக்கின்றனர். உறவினர் மகனான சங்கர் (23) என்பவர் கடந்த மே மாதம் மாணவியின் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, வீட்டில் தனியாக இருந்த மாணவியிடம், சங்கர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
மேலும், இதை யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டி உள்ளார். இந்நிலையில் மன அழுத்தத்தில் இருந்த மாணவியை மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளனர். அப்பொழுது மாணவி நடந்தது அனைத்தையும் கூறியுள்ளார்.
இதனை அடுத்து, காட்பாடி காவல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், சங்கரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.