பள்ளி மாணவர்களுக்கு குட்கா போதைப் பொருட்கள் விற்பனை : ஒருவர் கைது… ரூ.10,000 மதிப்பிலான புகையிலைப் பொருட்கள் பறிமுதல்!!

Author: Babu Lakshmanan
19 August 2022, 5:49 pm

திருவள்ளூர் அருகே பள்ளி மாணவர் இளைஞர்களுக்கு கூலிப் பான் குட்கா போதை பொருட்களை விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகே உள்ள பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பொன்ராஜ். இவர் இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பான், குட்கா, ஆன்ஸ் போன்ற புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், அவரிடம் திருப்பாலைவனம் காவல்துறையினர் நடத்திய சோதனையில், போதை பொருட்கள் விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட பொன்ராஜிடம் பதுக்கி வைத்திருந்த பத்தாயிரம் ரூபாய் மதிப்பிலான தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை போதை பொருட்கள் செய்யப்பட்டது.

போதைப் பொருட்களை விற்பனை செய்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு அவரை சிறையில் அடைத்தனர்.

  • Ajith Kumar Dubai car race victory அரங்கமே அதிர…ஒட்டுமொத்த உலகமே திரும்பி பார்க்க…மகனுடன் மேடையை பகிர்ந்த அஜித்..!