இனி கடைகளில் இந்த பொருட்களை விற்பனை செய்யக்கூடாது : விற்பனையாளர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி உத்தரவு!!

Author: Udayachandran RadhaKrishnan
19 August 2022, 10:17 pm

எலி பேஸ்ட், சானி பொடி இறக்குமதியை தடை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக மதுரையில் மருத்துவ துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் முதன்முறையாக அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல்நோக்கு சிறப்பு மருத்துவ சேவையை துவக்கி வைத்த மருத்துவ துறை அமைச்சர் ம.சுப்ரமணியன் பேட்டி அளித்தார்.

சாணிப் பொடி தற்கொலைக்கு பெரும் பகுதி காரணமாக உள்ளது. எலி பேஸ்ட், சானி பொடி ஆகிய இரு மருந்துகளையும் தடை செய்ய வேண்டியது அவசியம். சானிப் பொடி, எலி பேஸ்ட்டிற்கு மிக விரைவில் தடை ஆணைகள் அறிவிக்கபடும்.

ஒரு நபர்கள் சென்று எலி பேஸ்ட், சாணி பொடி கேட்டால் விற்பனை செய்ய கூடாது என விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எலி பேஸ்ட், சாணிப் பொடி விற்பனை குறித்து டிஸ்பிலே செய்ய கூடாது. எலி பேஸ்ட், சானி பொடி இறக்குமதியை தடை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

  • Pushpa 2 vs Mufasa collection புஷ்பா2-க்கே பயம் காட்டிய முஃபாஸா…வசூலில் முரட்டு சாதனை..!
  • Views: - 583

    1

    0