சென்னை ஐ.ஐ.டி. கல்லூரி மாணவி ரயில்வே தண்டவாளத்தில் சடலமாக மீட்பு : அதிர்ச்சி சம்பவம்… போலீசார் விசாரணை!!

Author: Babu Lakshmanan
20 August 2022, 11:54 am

திருவள்ளூர் : ஆவடி அருகே சென்னை ஐ.ஐ.டி கல்லூரி மாணவி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆவடி அருகே இரயில்வே தண்டவாளத்தில் இளம்பெண் தலை முகம் ஆகியவற்றில் காயம் ஏற்பட்டு மர்மமான முறையில் உயிரிழந்திருப்பதாக அவ்வழியே வேலை செய்து வந்த ரயில்வே பணியாளர்கள் ரயில்வே காவலர்களுக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் உயிரிழந்தது ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மோகன் பதான் என்பவரது மகள் மேகாஶ்ரீ (30) என்பது தெரியவந்தது .

மேலும் திருமணமாகாத இவர் டெல்லியில் எம்.டெக்,மற்றும் முதுகலை(Phd) பட்டம் பெற்று தற்போது சென்னை அடையாறில் உள்ள ஐ.ஐ.டி.மைய விடுதியில் தங்கி ஐ.ஐ.டி கல்லூரியில் மூன்று மாத ஆராய்ச்சி படிப்பு பணிகளை மேற்கொண்டு வந்தது தெரியவந்துள்ளது.

அடையாற்றில் பயின்று வரும் மாணவி மேகா ஸ்ரீ எதற்காக இங்கு வந்தார் ? எனவும் யாரையேனும் சந்திக்க ரயிலில் செல்லும் பொழுது தவறி விழுந்தாரா அல்லது வேறு எதேனும் காரணமாக என பல்வேறு கோணங்களில் ஆவடி இருப்பு பாதை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை ஐ.ஐ.டி கல்லூரி ஆராய்ச்சி மாணவி ஒருவர் ஆவடி தண்டவாளத்தில் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 659

    0

    0