கஞ்சாவால் சீரழிந்த குடும்பம்… தகராறு செய்த தந்தையை குத்திக் கொலை செய்த மகன் : நிற்கதியாய் நிற்கும் தாய்!!
Author: Udayachandran RadhaKrishnan20 August 2022, 1:13 pm
கஞ்சா குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டு வந்த தகப்பனை கத்தியால் குத்தி கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே அகரம் பேரூராட்சி டி.அய்யம்பாளையம் என்ற கிராமத்தில் காளியப்பன்(63) என்பவர் அவர் மனைவி பாக்கியத்துடன் இதே கிராமத்தில் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு நந்தினி (வயது 24), சரவணகுமார் (வயது 20), சிவா (வயது 17)ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில் நந்தினி திருமணம் முடிந்து அவரது கணவர் வீட்டில் வசித்து வருகிறார்.
இதைத்தொடர்ந்து இரண்டு மகன்களுடன் காளியப்பன் அவரது மனைவியும் ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில் காளியப்பன் கஞ்சா போதையில் அடிக்கடி கிராமத்தில் உள்ள பொதுமக்களிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து இன்று வழக்கம் போல் அவர் கஞ்சா போதையில் அவரது மனைவி பாக்கியம் மற்றும் மகன்களை ஆபாச வார்த்தைகளால் பேசி தாக்கம் முயன்றுள்ளார். இதில் ஆத்திரமடைந்த சரவணக்குமார் கத்தியால் தனது தந்தையை சரமாரியாக குத்தியதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலே பலியானார்
தகவல் அறிந்து விரைந்து வந்த வேடசந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் துர்கா தேவி தலைமையிலான போலீசார் சரவணக்குமாரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.