அதிர்ச்சி மேல் அதிர்ச்சி… கோவையில் போதை மாத்திரை கேட்டு டார்ச்சர் : மருந்துக்கடை உரிமையாளரை கத்தியால் குத்திய இளைஞர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
20 August 2022, 7:22 pm

கோவையில் போதை மாத்திரை கேட்டு மருந்து கடை உரிமையாளருக்கு கத்தியால் குத்திய இளைஞர்கள் தப்பியோடியது குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டம் எஸ்.ஐ.எச்.எஸ் காலனியில் மருந்துகடை வைத்து நடத்தி வருபவர் மோகன் குமார். நேற்று இரவு மூன்று இளைஞர்கள் ஆட்டோவில் மோகன்குமாரின் மருந்து கடைக்கு வந்துள்ளனர்.வந்த மூவரும் மோகன் குமாரிடம் போதை ஏற்றும் மாத்திரைகள் வேண்டும் என கேட்டு உள்ளனர்.

அதற்கு மருத்துவர் பரிந்துரை சீட்டு இல்லாமல் மாத்திரைகள் வழங்க முடியாது என்று மோகன்குமார் கூறியதால் ஆத்திரத்தில் மூவரில் ஒருவர் மறைத்து வைத்து இருந்த கத்தியால் அவரை தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் மோகன் குமாருக்கு மயக்கம் ஏற்பட்ட நிலையில் அங்கிருந்த மூவரும் தப்பியோடியுள்ளனர்.

பின்னர் இந்த சம்பவம் குறித்து மோகன்குமார், சிங்காநல்லூர் போலீசில் புகார் கொடுத்த நிலையில் வழக்குப் பதிவு சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சம்பவத்தில் காயமடைந்த மோகன் குமார் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். போதை மாத்திரை கேட்டு இளைஞர்கள் கத்தியால் மருந்து கடை உரிமையாளரை தாக்கிய சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

  • Ilaiyaraaja blesses Arivu marriage திடீரென காதலியை கரம் பிடித்த இளம் பாடகர்…ஓடி சென்று வாழ்த்திய இளையராஜா…!