இதுவே கடைசி முறை… குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
21 August 2022, 11:22 am

குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என்று டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் 92 பணியிடங்களுக்கான (துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர், உதவி இயக்குநர்(ஊரக வளர்ச்சித்துறை), டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கான முதல்நிலை எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில், இப்பணியிடங்களுக்கு www.tnpsc.gov.in என்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க நாளை (22.08.2022) கடைசி நாள் என்றும் பின்னர் அச்சேவை முற்றிலும் நிறுத்தப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 27 முதல் 29 வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம் எனவும் அக்டோபர் 30ம் தேதி முதல்நிலைத் தேர்வு நடைபெறும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

  • china decided to ban american movies shocking marvel fans சூப்பர் ஹீரோ திரைப்பட நிறுவனங்களுக்கு ஆப்பு வைக்கப்போகும் சீனா?