அக்கா மகளுக்காக வண்டி வண்டியாக சீர்வரிசை அடுக்கிய தாய்மாமன் : தமிழரின் பாரம்பரிய முறைப்படி திருவிழா போல நடந்த காதணி விழா!!
Author: Udayachandran RadhaKrishnan22 August 2022, 6:15 pm
திண்டுக்கல் : வண்ணம்பட்டியில் சகோதரியின் மகளுக்கு மயிலாட்டம், கரகாட்டத்துடன் மேளதாளம் முழங்க மாட்டு வண்டியில் தாய்மாமன் சீர்வரிசை கொண்டு வந்தது தமிழரின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக அமைந்திருந்தது
திண்டுக்கல் மாவட்டம் வண்ணம்பட்டியில் முனீஸ்வரன், ஹேமலதா தம்பதியினரின் குழந்தை ப்ரதீக்ஷாவிற்கு இன்று காதணி விழா நடைபெற்றது. காதணி விழாவில் தமிழர்களின் பாரம்பரியத்தை போற்றும் வகையில் குழந்தைக்கு தாய் மாமனின் சீர்வரிசை கொண்டுவரப்பட்டது.
இதில் தமிழரின் பாரம்பரியமான ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம், மேளதாளங்கள் முழங்க மாட்டு வண்டியில் தாய் மாமன் உறவினர்கள் தேங்காய், பழம், அரிசி, பருப்பு, தானியங்கள், பனைவெல்லம், சீனி, புத்தாடை, நகை மற்றும் மாலை என பாரம்பரிய முறைப்படி பல தட்டுக்கள் பெண்கள் தலையில் வைத்து கொண்டு வந்து சீர்வரிசை செய்து கிராம மக்களை ஆச்சரியப்பட வைத்தனர்.
இதனால் அப்பகுதியே திருவிழா நடைபெறுவது போல கோலாகலமாக காட்சி அளித்தது.
0
0