பாஜகவில் இணையச்சொல்லி மிரட்டல்… தலையே போனாலும் தலைவணங்கப் போவதில்லை : மணிஷ் சிசோடியா திட்டவட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
23 August 2022, 10:08 am

பாஜகவில் இணைந்தால் வழக்குகள் ரத்து செய்யப்படும் என தனக்கு செய்தி வந்துள்ளதாக டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா கூறியுள்ள குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் கலால் வரி விதிப்பு முறை மாற்றியமைக்கப்பட்டதில் பெருமளவு முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுந்துள்ளது. புகாரை தொடர்ந்து துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தொடர்புடைய 31 இடங்களில் கடந்த வெள்ளிக்கிழமை சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சோதனையின் போது ஏராளமான ஆவணங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில், மணீஷ் உள்ளிட்ட 15 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் மணீஷ் சிசோடியா முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குஜராத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜகவில் இணைந்தால் தன் மீதான அமலாக்கத்துறை, சிபிஐ வழக்குகள் ரத்து செய்யப்படும் என பாஜகவிலிருந்து தகவல் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

கட்சியை விட்டு வெளியேறினால், சிபிஐ, இஐடி வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்றும், கட்சியை விட்டு வெளியேறும்போது அதை உடைத்து விடுவதாகவும் எனக்கு குறுஞ்செய்தி வந்தது, அவர்களும் எனக்கு முதல்வர் பதவி தருவதாக உறுதியளித்தனர்.

நான் இங்கு முதல்வராக வரவில்லை, நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்குவதற்காக வந்துள்ளேன். ராஜ்புத் வம்சத்தைச் சேர்ந்த தான் தலையே போனாலும் ஊழலுக்கும் சதிக்கும் , தலைவணங்க போவதில்லை என்றும் கூறியுள்ளார்

  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 532

    0

    0