சோனியாவுக்கு என்னாச்சு? மருத்துவப் பரிசோதனைக்காக ராகுல், பிரியங்கா காந்தியுடன் பயணம்? காங்., மூத்த தலைவர் தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
24 August 2022, 8:46 am

ஜனாதிபதி திரவுபதி முர்முவை காங்., தலைவர் சோனியா நேற்று சந்தித்தார். காங்கிரஸ் கட்சியில், உட்கட்சி பூசல் உச்சகட்டத்தை எட்டி உள்ளது. மூத்த தலைவர்களான குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா உள்ளிட்டோர் கட்சி வழங்கிய பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்துவிட்டனர்.

இச்சூழ்நிலையில், நேற்று ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி திரவுபதி முர்முவை, காங்., தலைவர் சோனியா சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிலையில், மருத்துவ பரிசோதனைக்காக சோனியா வெளிநாடு செல்ல உள்ளனர். அவருடன், ராகுல் மற்றும் பிரியங்காவும் உடன் செல்கின்றனர். இதனை அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

மேலும் அவர் வரும் 4ம் தேதி டில்லியில் நடக்கும் கூட்டம் ஒன்றில் ராகுல் பேச உள்ளதாகவும், சோனியா நாடு திரும்பும் வழியில் அவரது தாயாரை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?