36 மணிநேரத்தில் 15 கொலைகள் நடக்கல… 12 தான் நடந்தது… இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு டிஜிபி விளக்கம்..!!

Author: Babu Lakshmanan
24 August 2022, 9:38 pm

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிப்பு குறித்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டிய நிலையில், இது தொடர்பாக டிஜிபி சைலேந்திர பாபு விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த 36 மணி நேரத்தில் 15 படுகொலைகள் நடந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ள அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, இதற்கு முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும் எனவும் கூறியுள்ளார், மேலும், திமுக ஆட்சியில், சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டை கடந்த 15 மாதங்களில் பலமுறை எடுத்துக் கூறியுள்ளதாகவும், முதல்வர் ஸ்டாலினின் நேரடி மேற்பார்வையில் இயங்கும் போலீஸ் துறை செயலிழந்து கிடப்பது வெட்கக்கேடானது, என்றும கூறியிருந்தார்.

இந்த நிலையில், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டு குறித்து டிஜிபி சைலேந்திர பாபு விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கடந்த 36 மணிநேரத்தில் 15 கொலைகள் நடந்ததாக சில ஊடகச் செய்திகளில் மிகைப்படுததி கூறப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் 22ம் தேதி 7 கொலைகளும், 23ம் தேதி 5 கொலைகள் மட்டுமே நிகழ்ந்துள்ளது.

சில ஊடகங்களில் பட்டியலிடப்பட்ட பல்வேறு கொலை வழக்குகள் ஆகஸ்ட் மாதத்தில் முந்திய நாட்களில் நடைபெற்றவை. மேலும், பெரும்பாலான கொலை சம்பவங்கள் குடும்ப உறுப்பினர்கள், தனி நபர்களிடையே உள்ள முன்விரோதம் காரணமாக நடந்துள்ளது.

2022ம் ஆண்டு ஜனவரி முதல் ஜுலை வரை 940 கொலைகள் நடந்துள்ளன. கடந்த 2021ல் இதே காலகட்டத்தில் 925 கொலைகளும், 2019ல் 1,041 கொலைகளும் நிகழ்ந்துள்ளது.

ஆகவே முந்தைய 2019ம் ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 101 கொலைச் சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளன, என தெரிவித்துள்ளார்.

  • Ajithkumar in GBU இன்னும் ஏழே நாள் தான்.. Good Bad Ugly செம அப்டேட்!
  • Views: - 493

    0

    0