போதைப் பொருள் விற்பனை… டிப்டாப் சாஃப்ட்வேர் என்ஜினியர் கைது ; விசாரணை வளையத்தில் ஐடி ஊழியர்கள்!!
Author: Babu Lakshmanan25 August 2022, 10:38 am
அதிக போதை ஏற்றக்கூடிய போதைப் பொருள்களை விற்பனை செய்து வந்த மென்பொறியாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை போருரில் உள்ள பிரபல ஐ.டி நிருவனம் செயல்பட்டு வருகிறது. அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக போருர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி, தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றும் வேளச்சேரியை சேர்ந்த மென் பொறியாளர் அருண்குமார் (29) காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து அதிக போதை தரக்கூடிய போதை பவுடர், போதை ஸ்டாம்ப், போதை மிட்டாய் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
பொறியாளர் அருண்குமாரிடம் விசாரணை மேற்கொண்டத்தில் ஆன்லைன் மூலம் போதைப்பொருட்களை வாங்கி அதனை ஐ.டி ஊழியர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதேபோல் பெங்களூரில் போதைப்பொருள் விற்பனை செய்து சிறைசிறை சென்று வந்தவன் என்பதும் தெரிய வந்தது.