நேற்றைய தொழிலாளி, இன்றைய முதலாளி… இன்றைய தொழிலாளி, நாளைய முதலாளி ; இதுதான் திருப்பூரின் கெத்து : முதலமைச்சர் ஸ்டாலின்!!

Author: Babu Lakshmanan
25 August 2022, 1:41 pm

திருப்பூர் : நேற்றைய தொழிலாளி, இன்றைய முதலாளி ஆகலாம். அதேபோல் இன்றைய முதலாளி , நாளைய தொழிலாளியாகலாம் என்பது திருப்பூருக்கு பொருந்தும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் சார்பில் ‘தோள் கொடுப்போம் தொழில்களுக்கு’ என்னும் மண்டல மாநாடு நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு, இந்த மாநாட்டை தொடங்கி வைத்ததுடன், ரூ.168 கோடி மதிப்பில் திட்டங்களை துவக்கி வைத்தார்.

பின்னர், அந்த மாநாட்டில் அவர் பேசியதாவது :- சிறு, குறு, நடுத்தர தொழில்கள் அதிகம் உள்ள மாவட்டம் திருப்பூர் ஆகும். 57,900 சிறு, குறு, நடுத்தர தொழில்கள் நிறுவனங்கள் திருப்பூரில் உள்ளன. அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் சிறு, குறு நடுத்தர தொழில்களின் பங்கு அதிகம்.

தொழிலதிபர்களாக வளரும் ஊராக மட்டுமின்றி தொழிலாளி வளரும் ஊராகவும் திருப்பூர் அமைந்துள்ளது. நேற்றைய தொழிலாளி, இன்றைய முதலாளி ஆகலாம். அதேபோல் இன்றைய முதலாளி , நாளைய தொழிலாளியாகலாம் என்பது திருப்பூருக்கு பொருந்தும்.

இதன் மூலம் 3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளன. சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் மனைகள் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது, எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • asin is the first choice for vaaranam aayiram movie வாரணம் ஆயிரம் படத்தில் அசின்? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!