வரலாறு காணாத வகையில் விலைவாசி உயர்வு… தவறான பொருளாதார கொள்கை தான் காரணம்: கேஎஸ் அழகிரி குற்றச்சாட்டு!!

Author: Babu Lakshmanan
26 August 2022, 10:27 am

நாட்டில் வரலாறு காணாத வகையில் விலைவாசி உயர்ந்து இருக்கிறது காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல்காந்தி இந்திய தேசத்தை ஒருங்கிணைப்போம் பாதயாத்திரை குறித்து தென் மண்டல கலந்தாய்வு ஆலோசனை கூட்டத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொள்வதற்காக இன்று காலை சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு ரயில் மூலம் வருகை தந்தார்.

அப்போது, ரயில்நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், இந்தியாவை ஒற்றுமைப்படுத்த மக்களை நேசிக்க, எதன் பெயராலும் மக்களை பிரிக்காத வகையில், இந்த பயணம் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இப்பொழுது நாட்டில் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டு இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் கலாச்சாரம் மக்களை பிரிக்கக் கூடிய ஒன்றாக உள்ளது. நாட்டில் வரலாறு காணாத வகையில் விலைவாசி உயர்ந்து இருக்கிறது.

அமெரிக்கர் டாலர் இப்போது இந்தியா ரூபாய் 80 வரை வந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை விண்ணை தொட்ட நிலையில் உள்ளது. காரணம், தவறான பொருளாதார கொள்கை தான்.

மோடி விவசாயிகளுக்கு பன்மடங்கு லாபம் கிடைக்க செய்வேன் என்றார். ஆனால் இதுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை. இது அரசாங்கத்தின் தவறு, வீழ்ச்சி இதை மக்களிடம் கொண்டு சொல்ல இந்த பயணம் மேற்கொள்ளப்படும், எனக் கூறினார்.

பாஜக சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரப்படுத்தி வருகிறது. இது தொடர்பாக செய்தியர்கள் கேள்வி எழுப்பியத்திற்கு, அவர் கூறியதாவது, பாஜகவுக்கும், சுதந்திரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சுதந்திர போராட்டத்தில் காங்கிரஸ் அல்லாத பல கட்சிகள் பங்கெடுத்து இருக்கிறார்கள்.

பாஜக இப்போதாவது சுதந்திரத்தை கொண்டாடுவது மகிழ்ச்சி. இவ்வளவு காலம் ஏன் பாஜக பங்கெடுக்கவில்லை. சுதந்திர தின நாள் அன்று ஏன் கொடி ஏற்றவில்லை. ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் இதுவரை 2 தடவை மட்டுமே சுதந்திர கொடி ஏற்றப்பட்டு இருக்கிறது.

ஒன்று, நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்த போது, பின்னர், வாஜ்பாய் பிரதமராக சென்ற போது இப்போது கொண்டாட கூடிய காரணம் என்ன? அப்போது, கொண்டாட கூடிய காரணம் என்ன? என பாஜக விற்கு கேள்வி எழுப்பினார்.

  • 30-year-old actress plays wife of 75-year-old actor.. actress shobanaa uthaman explain 75 வயது நடிகருக்கு மனைவியாக நடித்த 30 வயது நடிகை.. ஒப்புக்கொண்டது ஏன்? கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!