பாசி நிதி நிறுவன மோசடி வழக்கு : ரூ.171 கோடி அபராதம்… 27 வருடம் சிறை தண்டனை.. அதிரடி தீர்ப்பை வெளியிட்ட கோவை நீதிமன்றம்!!

Author: Udayachandran RadhaKrishnan
26 August 2022, 2:16 pm

திருப்பூரை தலைமையிடமாக கொண்ட பாசி நிதி நிறுவன மோசடி வழக்கு குறித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த 2011 ம் ஆண்டில் தமிழகம் முழுவதும் 52 ஆயிரம் முதலீட்டாளர்களிடம் 930 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், நிதி நிறுவன உரிமையாளர்கள் கமலவள்ளி, மோகன்ராஜ் ,கதிரவன் ஆகியோரை சிபிஐ கைது செய்தது.

கதிரவன் உயிரிழந்து விட்ட நிலையில், மோகன்ராஜ் மற்றும் கமலவள்ளி ஆகிய இருவருக்கும் இன்று தீர்ப்பானது வழங்கப்பட்டது. இந்த வழக்கில் கோவை முதலீட்டாளர் நல பாதுகாப்பு சட்ட நீதிமன்ற நீதிபதி ரவி தீர்ப்பு வழங்கினார்.

இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு அளித்த நீதிபதி, ரு.171 கோடி 74 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும், 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கினார். மேலும் இவ்வழக்கை முறையாக விசாரிக்காத சிபிஐக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 521

    0

    0