அதிமுகவுக்கு துரோகம் செஞ்சுட்டீங்க : திமுகவில் இணைந்த ஆறுகுட்டியை வசைபாடிய அதிமுக பிரமுகரின் ஆடியோ வைரல்!!
Author: Udayachandran RadhaKrishnan26 August 2022, 7:37 pm
அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி திமுகவில் இணைந்த நிலையில் – அதிமுக நிர்வாகி ஒருவர் அவர் திமுக”வில் இணைந்து தொடர்பாக அவருடன் தொலைபேசியில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை கவுண்டம்பாளையம் தொகுதியின் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி நேற்று முன்தினம் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
அது தொடர்பாக அவர் போட்டியிட்ட கவுண்டம்பாளையம் தொகுதியை சேர்ந்த துடியலூர் பகுதி எம்.ஜி.ஆர் இளைஞரணி இணைச் செயலாளர் எம்.ஆர்.நாகராஜன், ஆறுகுட்டியுடன் தொலைபேசியில் பேசி வாக்கு வாதத்தில் ஈடுபடும் ஆடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த ஆடியோவில் ஆறுகுட்டியைக் நீங்கள் அதிமுகவிற்க்கு துரோகம் செய்து விட்டதாக எம்.ஜி.ஆர் இளைஞரணி இணைச் செயலாளர் எம்.ஆர்.நாகராஜன் கூறுவதும், பதிலுக்கு ஆறுகுட்டி எடப்பாடி பழனிச்சாமி – சசிகலாவிற்க்கு துரோகம் செய்ததாக கூறுவதும் அந்த ஆடீயோவில் பதிவாகியுள்ளது.