‘மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால்’ : பரந்தூர் விமான நிலையம் குறித்து திமுகவை பங்கம் செய்த ஜெயக்குமார்!!
Author: Udayachandran RadhaKrishnan26 August 2022, 8:51 pm
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். அப்போது அவர் பேசியதாவது, அதிமுக ஆட்சி காலத்தில் ஒரு துளி மழைநீர் கூட தேங்கியது இல்லை. திமுக ஆட்சி காலத்தில் சாலையில் தற்போதே மழைநீர் ஆனது தேங்கி உள்ளது. மழைக் காலங்களில் செய்ய வேண்டிய முன்னெச்சரிகை நடவடிக்கைகளை திமுக செய்ய தவறியது.
நல்லா இருந்த தொகுதி தற்போது எந்த அடிப்படை வசதி இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது நானும் மலை நீரில் நடந்து வந்து செய்தியாளர்களை சந்தித்து வருகிறேன்.
மக்களுக்கு கட்டப்பட்ட குடியிருப்புகளில் மக்களை அமர்த்தாமல் ஈகோ உடன் செயல்படுகின்றார். இந்தப் பகுதி சட்டமன்ற உறுப்பினர் சட்டமன்றத்தில் கையெழுத்திட்டு சம்பளம் வாங்குகிறார்.
ஆனால் இங்கிருக்கும் மக்களுக்காக எந்த வேலையும் செய்யவில்லை. இந்த தொகுதியில் இருக்கும் குழந்தைகளை கேட்டாலும் கூட இந்த தொகுதி எம்.எல்.ஏ. ஜெயக்குமார் என்றுதான் தெரிவிக்கும்.
அதிமுக ஆட்சியில் வழங்கபட்ட லேப் டாப் கொரோன காலத்தில் மானவர்களுக்கு பயன் உள்ளதாக இருந்தது. டிஜிபி அலுவலகத்தில் இருந்து தமிழகத்தில் நடந்த கொலை குறித்து வந்த அறிக்கை மொட்டை கடிதாசி தான்.
திமுக அமைச்சர் கார் மீது செருப்பு பேசியது தவறுதான். அண்ணாமலை பேசியதாக வெளியிட்ட ஆடியோ குறித்து உன்மை தன்மை தெரியாமல் பேச முடியாது.
விவசாய நிலங்களை அழித்து தான் விமான நிலையம் வர வேண்டுமா. அதிமுக ஆட்சிக்காலத்தில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்தோம். இப்போது குற்றவாளிகள் தைரியமாக சுற்றுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.