சென்னைக்கு வேலைதேடி செல்லும் பெண்களே உஷார்… பாலியல் தொழிலுக்கு தள்ளப்படும் அவலம்… பெண் புரோக்கர் உள்பட 3 பேர் கைது..!!

Author: Babu Lakshmanan
27 August 2022, 2:13 pm

சென்னைக்கு வேலை தேடி வரும் இளம் பெண்களை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண் புரோக்கர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை நகருக்கு வேலை தேடி வரும் அப்பாவி இளம்பெண்களிடம் சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாகவும் , தனியார் நிறுவனங்களில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாகவும், ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றுகின்றனர்.

பின்னர், அடுக்குமாடி குடியிருப்புகள், பங்களா வீடுகள் மற்றும் தனியார் விடுதிகளுக்கு அழைத்துச் சென்று தங்க வைத்து அவர்களை கட்டாயப்படுத்தி விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாகவும், இதன்மூலம், சிலர் பணம் சம்பாதிப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்படி, இந்த பாலியல் கும்பலை கைது செய்ய சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டதின்பேரில், மத்திய குற்றப்பிரிவின், விபச்சார தடுப்புப்பிரிவு காவல் குழுவினர் மூலம் கண்காணித்து விபச்சார தரகர்களை கைது செய்து, அப்பாவி பெண்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையாளர் தலைமையில் விபச்சார தடுப்புப் பிரிவு உதவி ஆணையாளர், காவல் ஆய்வாளர் மற்றும் காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, மடிப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பை கண்காணித்தபோது, அங்கு பாலியல் தொழில் நடத்தி வந்தது உறுதி செய்யப்பட்டது.

அதன் பேரில் பாலியல் தொழில் நடத்திய பெண் புரோக்கர் ஜான்சி (எ) பூர்ணிமா (32), சூர்யா (எ) ராஜா (24), குமார் (34) ஆகிய மூவரை கைது செய்தனர்.

மேற்படி இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த வைத்திருந்த 8 பெண்கள் மீட்கப்பட்டனர். மேலும், விசாரணையில் கைது செய்யப்பட்ட புரோக்கர் ஜான்சி (எ) பூர்ணிமா மீது பெண்களை வைத்து பாலியலை தொழில் நடத்திய குற்றத்திற்காக 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதும், இவர் 2 முறை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதும், சூர்யா (எ) ராஜா மீதும் பாலியல் தொழில் நடத்திய குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதும் 1 தெரியவந்தது.

விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.

  • actor sugumaran illegal relationship திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய காதல் பட நடிகர்…காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த துணை நடிகை..!
  • Views: - 554

    0

    0