சாதி வன்முறையை தூண்டும் விதமாக பேச்சு… மேட்டூர் எம்எல்ஏ மீது விசிக சார்பில் புகார் ; 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

Author: Babu Lakshmanan
27 August 2022, 5:57 pm

மேட்டூர்‌: வன்முறையை தூண்டும்‌ விதமாக பேசியதாக மேட்டூர்‌ எம்‌.எல்‌.ஏ சதாசிவம் மீது வழக்குப்‌ பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேட்டூரை அடுத்த கொளத்தூர்‌ ஊராட்சி ஒன்றியம்‌ கருங்கலூரில்‌ பாமகவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மேட்டூர்‌ சட்டமன்ற உறுப்பினர்‌ எஸ்‌.சதாசிவம் கலந்து கொண்டு பேசினார். அப்போது, சமூக நல்லிணக்கத்திற்கு எதிராகவும்‌, சாதி பிரிவினை மற்றும்‌ வன்முறையை தூண்டும்‌ விதமாகவும்‌ பேசியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக விடுதலை சிறுத்தை கட்சியின்‌ சேலம்‌ வடக்கு மாவட்ட செயலாளர்‌ வசந்த்‌, சேலம்‌ மாவட்ட காவல்‌ கண்காணிப்பாளரிடம்‌ புகார்‌ ஒன்றை அளித்தார். அதனடிப்படையில், எம்எல்ஏ சதாசிவம்‌ மீது கொளத்தூர்‌ காவல்‌ துறையினர்‌ இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்‌ பதிவு செய்துள்ளனர்‌.

மேட்டூர்‌ பா.ம.க எம்‌எல்‌ஏ மீது விசிக கொடுத்த புகாரின்‌ பேரில்‌ வழக்குப்‌ பதிவு செய்து இருப்பதால்‌ கொளத்தூரில்‌ பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இதனிடையே, எம்எல்ஏ சதாசிவம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

  • ags condition for producing str 50 பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?