அதென்ன கான்வாயா? கால்வாயா? முதல்வர் கான்வாய்க்கு வந்த சோதனை : போதையில் ஸ்டண்ட் செய்த இளைஞர் கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
30 August 2022, 9:58 am

முதல் அமைச்சர் கான்வாய் வந்து கொண்டிருந்தபோது, ஸ்டண்ட் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை காமராஜர் சாலையில் முதலமைச்சர் கான்வாய் வந்து கொண்டிருந்தபோது, குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் ஸ்டண்ட் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராயப்பேட்டையைச் சேர்ந்த சுஜய் (வயது 20) என்பவரை அண்ணா சதுக்கம் போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இதே போல கடந்த ஜூன் மாதம் முதல்வரின் கான்வாய் சென்னை மெரினா காமராஜர் சாலையில் நேப்பியர் பாலத்தை கடந்து சென்ற நிலையில் திடீரென சாலையில் எதிர்த்திசையில் இருந்து ஆக்டிவா இரு சக்கர வாகனத்தில் இளைஞர் ஒருவர் திடீரென குறுக்கே வந்துள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத போலீசார் அந்த இளைஞரை மடக்கிப்பிடித்தது குறிப்பிடத்தக்கது.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 549

    0

    0