அந்த சாரா இல்லனா என்ன.. இந்த சாரா இருக்கா : பிரபல வாரிசு நடிகையுடன் இளம் கிரிக்கெட் வீரர் டேட்டிங்.. வைரலாகும் புகைப்படம்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 August 2022, 4:15 pm

சுப்மன் கில் இந்தி நடிகையுடன் டேட்டிங் செய்த வீடியோ மற்றும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரான சுப்மன் கில் கடந்த 2019-ம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார். அவர் ஒருநாள் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் தொடர் நாயகன் விருதுகளை பெற்றுள்ளார். அவர் இதுவரை 11 டெஸ்ட் மற்றும் 9 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் மகளான சாராவும், சுப்மன் கில்லும் காதலிப்பதாக சமூக வலைதளத்தில் கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இருவரும் சில புகைப்படங்களை தனித்தனியே பகிரும் போது ஒருவருக்கொருவர் கமெண்ட் செய்வதை வழக்கமாக வைத்திருந்தனர்.

இதனையடுத்து, இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த சுப்மன் கில், நான் இப்போதும் தனி ஆளாகத் தான் இருக்கிறேன் என கூறி இந்த கிசுகிசுவுக்கு முற்றுபுள்ளி வைத்தார். அதனையடுத்து இருவர் குறித்தும் எந்த தகவலும் வருவதில்லை.

இந்நிலையில் சுப்மன் கில் இந்தி நடிகையுடன் டேட்டிங் செய்த வீடியோ மற்றும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு உணவகத்தில் சாரா அலிகானை ஒரு ரசிகை பார்த்து வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவில் கிரிக்கெட் வீரர் சுப்மன் கில்லுடன் சாரா இரவு உணவு சாப்பிடுவது போல இருந்தது. உடனே அதனை டிக்டாக்கில் பதிவு செய்துள்ளார்.

சாரா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் தங்கள் டேபிளுக்கு அருகில் ஒரு பணியாளரிடம் ஆர்டர் செய்வது போல அந்த வீடியோவில் இருந்தது. அதில் சாரா இளஞ்சிவப்பு நிற உடையிலும் சுப்மான் வெள்ளை மற்றும் பச்சை நிற சட்டை அணிந்திருந்தார். இரண்டு பிரபலங்களின் ரசிகர்களும் அவர்களை ஒன்றாகக் கண்டு ஆச்சரியமடைந்தனர்.

சாரா அலி கான் நடிகர்கள் சைப் அலி கான் மற்றும் அம்ரிதா சிங் ஆகியோரின் மகள். இவர் மன்சூர் அலி கான் பட்டோடி மற்றும் ஷர்மிளா தாகூர் ஆகியோரின் பேத்தியும் ஆவார். அவர் 2017-ல் கேதார்நாத் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் மற்றும் சிம்பா மற்றும் லவ் ஆஜ் கல் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

சாரா அலி கான் ‘லவ் ஆஜ் கல் 2’ படத்தின் படப்பிடிப்பின் போது கார்த்திக் ஆர்யனுடன் டேட்டிங் செய்வதாக வதந்தி பரவியது. சமீபத்தில் படத் தயாரிப்பாளர் கரண் ஜோஹரும் அதை உறுதிப்படுத்தினார்.

ஆனால், 2020ல் இருவரும் பிரிந்தனர் . சுப்மன் கில் இந்தி நடிகையுடன் டேட்டிங் செய்த வீடியோ மற்றும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1566

    0

    0