பிரபல தமிழ் நடிகையின் ஆண் நண்பர் கைது : பின்னணியில் முக்கிய அரசியல் புள்ளி..?

Author: Rajesh
30 August 2022, 7:32 pm

பிரபல தமிழ் திரைப்பட நடிகைக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு திரைப்படத் தொழிலில் பஞ்சாபை சேர்ந்த பிரபலம் ஒருவருடன் நட்பு ஏற்பட்டு அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து பட தயாரிப்பு நிறுவனத்தினை விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகில் உள்ள பெரிய முதலியார் சாவடியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி தொழில் செய்து வந்துள்ளனர்.

அப்போது பிரபல நடிகையை திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை நடிகையுடன் ஒன்றாக இருந்துள்ளனர். இருவருக்கும் ஏற்கனவே நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது. ஆனால் பட தயாரிப்பு நிறுவனம் தொடர்பாக இருவருக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திருமணத்தை நிறுத்தினர்.

திருமணத்தை நிறுத்தி, இருவரும் பிரிந்தாலும், தொழில் ரீதியாக இருவரும் நட்புடனே பட தயாரிப்பு நிறுவன தொடக்கத்தில் பிஸியாக இருந்தனர். படத்தையும் தயாரித்தனர். ஆனால் படத்தை வெளியிட போதிய பணம் தேவைஎன்றிருந்தது.

அந்த நேரத்தில்தான் பிரபல நடிகையுடன் அந்த பிரபலம் ஒன்றாக இருந்த புகைப்படத்தினை சமூக வலைதளத்தில் பதிவிடுவதாக கூறி மிரட்டல் விடுத்தாகவும், பண மோசடி செய்ததாகவும், பொருளாதார ரீதியாகவும், தொழில் ரீதியாக துன்புறுத்தல் செய்ததாக பிரபல நடிகை தரப்பில் குற்றப்பிரிவு போலீசில் கடந்த 26 ஆம் தேதி புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் குற்றப்பிரிவு போலீசார் 16 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அந்த பிரபலத்தை கைது செய்து விசாரனை செய்து வருகின்றனர்.

இந்த வழக்கிற்கு தமிழ்நாட்டின் மிக பிரபலமான முக்கிய அரசியல் புள்ளி ஒருவர் அழுத்தம் கொடுத்ததால் மட்டும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் தீயாக பரவி வருகிறது.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 614

    0

    0