திருத்தணி முருகன் கோவில் விடுதியில் அசைவ விருந்து : அதிகாரிகளுக்கு சிக்கன், முட்டையுடன் சிறப்பான கவனிப்பு.. வைரலாகும் ஷாக் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
31 August 2022, 7:14 pm

திருவள்ளூர் : திருத்தணி முருகன் கோவிலுக்கு சொந்தமான பக்தர்கள் தங்கும் விடுதியில் கோயில் அதிகாரிகள் தடால் புடால் அசைவ விருந்து உபசரித்த சமப்வம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஆறுபடை வீடுகளின் ஒன்றான ஐந்தாம் படை வீடாக சிறந்து விளங்கும் பிரசித்தி பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா கர்நாடகா என பல்வேறு மாநிலங்களில் இருந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

மேலும் கோயிலுக்கு சொந்தமான கார்த்திகேயன் இல்லம், தணிகை இல்லம் விடுதிகளில் கட்டண அடிப்படையில் பக்தர்களுக்கு அறைகள் வழங்கப்பட்டு வருகிறது.

சில பேர் கோவில் குடியிருப்பு அறையில் பக்தர்கள் தங்கி விரதம் இருந்து தங்களது வேண்டுதலை நிறைவேற்ற மறுநாள் காலை சிறப்பு அபிஷேகத்தில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வதும் மற்றும் மலைக்கோவிலில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதும் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் பங்கேற்கின்றனர்.

இந்த நிலையில் கார்த்திகேயன் இல்லத்தில் உள்ள அறையில் அமர்ந்து கொண்டு திருத்தணி முருகன் கோவிலில் சூப்பரண்டாக பணிபுரியும் உயர் பதவியில் இருக்கக்கூடிய கலைவாணன், வித்யாசாகர் இருவரும் அசைவு விருந்தான சிக்கன் முட்டை, மீன் வருவலுடன் உணவு அருந்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருவதால் பக்தர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவில் குடியிருப்பு அறையில் பக்தர்கள் தங்கும் புனிதமான அறையில் பொறுப்பெற்ற முறையில் இருக்கக்கூடிய அதிகாரிகள் கோவில் அறையில் அமர்ந்து அசைவு சாப்பாடு சாப்பிடும் அதிகாரிகள் மீது இந்து சமய அறநிலைத்துறை அதிகாரி நடவடிக்கை எடுக்க முருகன் பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

  • tamannaah dialogue in odela 2 trailer trolled by netizens பூமாதா, கோமாதா… படத்தில் பேசிய வசனத்தால் ட்ரோலுக்குள்ளாகும் தமன்னா…