மகாலட்சுமியே பொண்ணா கிடைச்சுடுச்சு : சீரியல் நடிகை மகாலட்சுமியை மறுமணம் செய்த பிரபல சினிமா தயாரிப்பாளர்!!

Author: Udayachandran RadhaKrishnan
1 September 2022, 3:49 pm

தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளராக வளம்வருவர் ரவீந்திரன். இவர் சாந்தனு நடித்த முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட படங்களை தயாரித்திருக்கிறார். லிப்ரா (LIBRA) நிறுவனம் மூலம் படங்களை தயாரித்து வரும் இவர், சில திரைப்படங்களை விநியோகமும் செய்து இருக்கிறார்.

இந்த நிலையில் தயாரிப்பாளர் ரவீந்திரன், சின்னத்திரை புகழ் மகாலட்சுமியை இன்று திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார். மகாலட்சுமி பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றினார். அதன் பின் தற்போது சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார்.

இதற்கிடையே ரவீந்திரன் மற்றும் மகாலட்சுமி ஆகியோர் இன்று காதல் திருமணம் செய்துகொண்டுள்ளனர். அவர்களின் திருமணம் திருப்பதியில் நடைபெற்றது.

அந்தப் புகைப்படங்களை பகிர்ந்துள்ள ரவீந்திரன், ”மகாலட்சுமி போல பொண்ணு கிடைச்சா வாழ்க்கை நல்ல இருக்கும்னு சொல்லுவாங்க. அந்த மகாலட்சுமியே வாழ்க்கைக்கு கிடச்சா?” என பதிவிட்டு புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இவர்களது திருமணம் இன்று திருப்பதியில் நடந்து முடிந்த நிலையில் விரைவில் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 709

    0

    2