சன் டிவிக்கு மாறிய ஜீ தமிழ் பிரபலம் : அட.. கயல் மாதிரியே அவங்களுக்கும் லீட் ரோல்!!

Author: Udayachandran RadhaKrishnan
1 September 2022, 4:41 pm

ஒரு டிவி சீரியலில் இருந்து விலகி மற்ற சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பல நடிகர், நடிகைகள் மாறி பணியாற்றுவது வழக்கம்.

அப்படி எத்தனையோ நடிகர்கள், காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்ற பழமொழிக்கு ஏற்ப, வேறு வேறு சேனல்களுக்கு தாவி வருகின்றனர். அந்த வகையில் தற்போது சிக்கியுள்ளவர் செம்பருத்தி சீரியல் புகழ் ஷபானா.

இவர் நடித்த செம்பருத்தி சீரியல் ஜீ தமிழில் 5 வருடம் ஒளிபரப்பட்டு, சமீபத்தில்தான் கிளைமேக்ஸ் ஒளிபரப்பட்டது. பார்வதி கதாபத்திரத்தில் ரசிகர்களை கட்டிப்போட்டவர்.

இதற்கிடையே பாக்கியலட்சுமி சீரியலில் செழியனாக நடித்து வந்த ஆர்யனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் ஷபானா. சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

செம்பருத்தி சீரியல் முடிவடைந்த நிலையில், ஷபானாவின் அடுத்த சீரியலைப் பற்றி அறிந்துக் கொள்ள ஆர்வத்துடன் இருந்தனர் ரசிகர்கள்.இந்நிலையில் சன் டிவி-யில் விரைவில் ஒளிபரப்பாகவிருக்கும் புதிய சீரியலில் ஷபானா லீட் ரோலில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 1195

    20

    6