விரைவில் வரப்போகுது குட்நியூஸ்? நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை அமைச்சர் அன்பில் மகேஷ் சந்திக்க உள்ளதாக தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
1 September 2022, 7:45 pm

விடுபட்டு போன 171 தொழிற்கல்வி ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வது, எல்கேஜி முதல் 5ம் வகுப்பு வரை கூடுதல் ஆசிரியர்களை நியமனம் செய்வது, அரசாணை 101 மற்றும் 108 ஆகியவற்றை சீரமைப்பு செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதனிடையே, வருகிற 10ம் தேதி ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு நடத்தும் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். இதற்கிடையில், இந்த மாநாட்டிற்கு முன்னதாக ஆசிரியர்களின் கோரிக்கைகள் சிலவற்றை பூர்த்தி செய்வது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சந்திக்க உள்ளதாகவும், அப்போது ஆசிரியர்களின் 15 கோரிக்கைகள் தொடர்பாக பேச உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்பு இன்று அல்லது நாளை நடைபெறலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்