தடுப்பு கம்பியின் இடையே சிக்கிய நாய் ; நன்றியுள்ள ஜீவனிடம் மனிதத்தை வெளிப்படுத்திய மக்கள்!!

Author: Babu Lakshmanan
4 September 2022, 1:36 pm

வேலூர் அருகே சாலையோரம் உள்ள தடுப்பு கம்பிகளின் இடையே சிக்கிக் கொண்ட நாயை பொதுமக்கள் பத்திரமாக மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

வேலூர் சத்துவாச்சாரி அடுத்த கெங்கையம்மன் கோவில் பகுதியில் உள்ள பெங்களூர் – சென்னை தேசிய நெடுஞ்சாலையின் பைபாஸ் சாலையில் இருபுறமும் தடுப்பு கம்பிகள அமைக்கப்பட்டு உள்ளது.

இரவு நேரத்தில் அந்தப் பகுதியில் சாலையை கடக்க முயன்ற நாய் ஒன்று தடுப்புக் கம்பிகளின் இடைவெளியில் நுழைந்து செல்ல முயன்றுள்ளது.

அப்போது அது தடுப்பு கம்பிகளின் இடையில் சிக்கி நீண்ட நேரமாக கத்தியுள்ளது. இதனை பார்த்த பொது மக்கள் கம்பிகளை வளைத்து இடைவெளியை அதிகமாக்கி நாயை பத்திரமாக மீட்டனர். பின்னர் மீட்கப்பட்டதும் நாய் அங்கிருந்து மெதுவாக நடந்து சென்றது. நன்றியுள்ள ஜீவனிடம் மனிதத்தை வெளிப்படுத்திய மனிதர்கள்.

  • asin is the first choice for vaaranam aayiram movie வாரணம் ஆயிரம் படத்தில் அசின்? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!