விவசாய நிலத்தில் அரிய வகை அபூர்வ எறும்புத்திண்ணி : குச்சியை எடுத்து விரட்டிய மக்கள்.. வைரல் வீடியோ!!
Author: Udayachandran RadhaKrishnan8 September 2022, 2:35 pm
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள ருகடா கிராமத்தில் விவசாயி ஒருவரின் விளைநிலத்தில் அபூர்வ வகை விலங்கினமான அழுங்கு ஒன்று இன்று காணப்பட்டது.
விசித்தரமான விலங்கை விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் ஆகியோர் ஆச்சரியத்துடன் பார்த்தனர். பின்னர் இது பற்றி வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
விரைந்து வந்த வனத்துறையினர் அழுங்கை பிடித்து பாதுகாப்பாக எடுத்து சென்றனர்.
தகுதியான வனப் பகுதியில் அழுகு விடுவிக்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.