தூத்துக்குடி To சென்னைக்கு கட்டணம் இவ்வளவா..? ”PeriAir” விமான சேவையை தமிழக அரசு முயற்சிக்கலாமே… திமுக எம்எல்ஏவின் ஐடியா..!!
Author: Babu Lakshmanan8 September 2022, 5:54 pm
தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு செல்வதற்கான விமான சேவைக் கட்டணத்தை கண்டித்த திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா, தமிழக அரசுக்கு யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார்.
திமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் செயலாளராகவும், மன்னார்குடி தொகுதி எம்எல்ஏவாகவும் இருப்பவர் டிஆர்பி ராஜா. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் திமுக நிர்வாகிகளில் இவரும் முக்கியமானவராவார். தனது டுவிட்டர் பக்கத்தின் மூலம் பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில், தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு செல்வதற்கான விமான சேவைக் கட்டணத்தை கண்டித்த திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா டுவிட் ஒன்றை போட்டுள்ளார்.
அதில், ”தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு செல்வதற்கான டிக்கெட் விலை ரூ.17,748 முதல் ரூ. 20,665 வரை விற்கப்படுகிறது; இந்த சேவை கட்டணத்தில் இலங்கைக்கே சென்று விடலாம். அதுமட்டுமல்லாமல், ”PeriAir” என்ற பெயரில் மாநில அரசே விமான சேவையை தொடங்கலாமே? தமிழ்நாட்டின் சமத்துவ வளர்ச்சிக்கு சிறகுகள் கொடுத்தவர் பெரியார்”, எனக் குறிப்பிட்டுள்ளார்.
அவரது இந்தப் பதிவிற்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றனர்.