சாலையோர கிணற்றில் கார் கவிழ்ந்து 3 கல்லூரி மாணவர்கள் பலி… ஓணம் பண்டிகையை கொண்டாடிவிட்டு திரும்பிய போது நிகழ்ந்த சோகம்..!!

Author: Babu Lakshmanan
9 September 2022, 10:16 am

கோவை ; ஓணம் பண்டிகை கொண்டாடி விட்டு வரும் வழியில், கட்டுப்பாட்டை இழந்து கிணற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர்.

கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்த ரோஷன் (18), தனது நண்பர்களுடன் நேற்று சிறுவாணி சாலையில் உள்ள தனியார் கிளப்பில் ஓணம் பண்டிகையை கொண்டாடிவிட்டு இன்று அதிகாலை காரில் (Suzuki Iszusu) நண்பர்களுடன் வந்து கொண்டிருந்தார்.

தென்னமநல்லூர் பகுதியில் வளைவில் திருப்பும் போது கட்டுப்பாட்டை இழந்த அவரது கார் மாரப்ப கவுண்டர் என்பவருக்கு சொந்தமான தோட்டத்திற்குள் இரும்பு கேட்டை உடைத்து கொண்டு சுமார் 120 அடி ஆழம் கொண்ட கிணற்றில் விழுந்துள்ளது.

முன்னதாக இதில், காரை ஓட்டி வந்த ரோஷன் கதவை திறந்து வெளியே விழுந்து விட உடன் வந்த நண்பர்கள் ஆதர்ஷ்(18), விவேக்பாபு(18), நந்தனன்(18) ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அவர்கள் அனைவரும் கோவையில் வெவ்வேறு தனியார் கல்லூரியில் பயின்று வருபவர்கள்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் காரையும் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களையும் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

  • tamannaah dialogue in odela 2 trailer trolled by netizens பூமாதா, கோமாதா… படத்தில் பேசிய வசனத்தால் ட்ரோலுக்குள்ளாகும் தமன்னா…