ராகுல் காந்தி சொன்ன மெகா திட்டம் : ஒற்றுமை யாத்திரையில் நெகிழ்ந்து போன வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழு..!!

Author: Babu Lakshmanan
9 September 2022, 3:52 pm

கன்னியாகுமரியில் ஒற்றுமைய யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி தங்களுக்கு புதிய ஆலோசனை கூறியதாக கரூர் மாவட்டத்தை சேர்ந்த வில்லேஜ் குக்கிங் youtube சேனல் சமையல் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் கன்னியாகுமரியில் இருந்து நடை பயணமாக புறப்பட்ட ராகுல் காந்தி, மூன்றாவது நாளான இன்று காலை நாகர்கோயிலில் இருந்து காலையில் புறப்பட்டு புலியூர்குறிச்சியை அடைந்தார். இதற்கு இடையே அவரை வில்லேஜ் குக்கிங் என்ற youtube சேனலில் சமையல் காட்சிகளை வெளியிட்டு வரும் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெரிய தம்பி, சுப்பிரமணியன் ஆகியோர் தலைமையிலான குழு சந்தித்து நடை பயணத்திற்கு ஆதரவு தெரிவித்தது. மேலும், ராகுல் காந்தியின் நடைபயணத்தில் பங்கெடுத்துக் கொண்டனர்.

ராகுல் காந்தியை சந்தித்து பேசியது குறித்து அந்த குழுவினர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :- ராகுல் காந்தியை சந்தித்தது பெரு மகிழ்ச்சியை தருவதாக உள்ளது. மேலும், எங்கள் குழுவோடு ஏற்கனவே ராகுல் காந்தி இணைந்து சமையலில் ஈடுபட்ட காட்சி, எங்கள் யூ ட்யூப் சேனலில் வெளிவந்த பின்னர், நாங்கள் மிகவும் பிரபலமடைந்ததோடு, தங்களுக்கு பெரிய அளவிலான மரியாதையையும் ஏற்படுத்தி தந்தது.

தற்போது அவரை சந்தித்தபோது ராகுல் காந்தி தங்களிடம் வெளிநாட்டிற்கு செல்ல ஏற்பாடு செய்ய தயாரான நிலையில், நீங்கள் ஏன் செல்லவில்லை என கேட்டார். அதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது என நாங்கள் கூறினோம். நீங்கள் தமிழ்நாட்டிற்கு வெளியே பிற மாநிலங்களில் சென்று ஏன் சமையல் செய்யக்கூடாது?, என எங்களிடம் கேட்டது எங்களுக்கு பெரும் உத்வேகத்தை தருவதாக இருந்தது.

தங்களுக்கு பெருமை சேர்த்து தந்த ராகுல் காந்திக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் கடும் முயற்சி மேற்கொண்டு இந்த பயணம் செல்லும் அவரை வாழ்த்துவதற்காக இங்கு வந்தோம். மேலும், பல மாநில உணவு வகைகளை இணைந்து சமைத்து ஒற்றுமை என்பதை வெளிப்படுத்துமாறு எங்களுக்கு அவர் அறிவுரை கூறியது, எங்களுக்கு புதிய திட்டத்தை அளிப்பதாக இருந்தது. அவ்வாறு மேற்கொள்வதற்காக முயற்சி எடுக்க உள்ளதாக தெரிவித்தனர்.

  • members in tn assembly discussed about kadhalikka neramillai movie இந்த படத்தை தடை செய்ய வேண்டும்! சட்டசபையில் எழுந்த விவாதம்- இப்படி எல்லாம் நடந்திருக்கா?