மதுபோதையில் இளம்பெண்ணை வர்ணித்த இளைஞர்களுக்கு கத்திக்குத்து : தங்கைக்காக குற்றவாளியாக மாறிய சகோதாரன்!!

Author: Udayachandran RadhaKrishnan
10 September 2022, 5:59 pm

வேலூரில் இரண்டு வாலிபர்களுக்கு கத்திகுத்து நடந் சம்பவத்தில் தங்கையை கேலி செய்ததால் கத்தியால் குத்தியதாக வாக்குமூலம் அளிக்கப்பட்டுள்ளது.

வேலூர் வேலப்பாடி சின்ன தெருவை சேர்ந்தவர் அஜித் குமார் (வயது 26), இவரது நண்பர் தினேஷ் (வயது 22). கார் டெக்கரேட்டர்களாக வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நண்பர்கள் இருவரும் நேற்று இரவு 1 மணி அளவில் மது அருந்திவிட்டு நடந்து சென்று கொண்டு இருந்தனர். அப்போது அஜய் என்பவர் பைக்கில் தனது தங்கையை அழைத்து சென்றுள்ளார்.

இதனைக் கண்ட இரண்டு வாலிபர்களும் இளம்பெண்ணை கேலி கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து தங்கையை வீட்டில் இறக்கி விட்டு தனது நண்பர்களுடன் வந்த வாலிபர், அஜித்குமார் மற்றும் தினேஷ் ஆகியோரை கத்தியால் குத்தி சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியோடி உள்ளனர்.

வாலிபர்கள் 2 பேரும் ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்ததை கண்ட அப்பகுதி மக்கள் இதுகுறித்து வேலூர் தெற்கு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து ஆய்வாளர் ரஜினிகாந்த் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 2 வாலிபர்களையும் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த வேலூர் தெற்கு காவல் துறையினர் அஜய் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி