மத்திய அரசு நிதியை எதுக்கு எதிர்பாக்கறீங்க? அதெல்லா வேண்டாம் : கட்சி எம்பி, எம்எல்ஏக்களுக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி திடீர் ஆர்டர்!!
Author: Udayachandran RadhaKrishnan10 September 2022, 9:59 pm
மேற்கு வங்க மாநிலத்தில் வரும் 2023 ம் ஆண்டில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் அறிவிப்பிற்கு முன்னதாக, மத்திய அரசின் நிதியுதவி மூலம் ஏழைகளுக்கான வீட்டு வசதி திட்டத்திற்கு உள்ளூர் பகுதி மேம்பாட்டு நிதியை செலவிடுங்கள் என கட்சி எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவுறுத்தி உள்ளார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் மூலம் ஏழைமக்களுக்கு வீடு கட்டுவதற்காக மத்திய அரசு நிதி உதவி அளித்து வருகிறது. தற்போது அவை மேற்கு வங்க மாநிலத்திற்கு வழங்கப்பட வில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக பார்த்தா சாட்டர்ஜி மற்றும் அனுப்ரதா மோண்டல் மற்றும் மலாய் கட்டக் ஆகியோர் மீது சி.பிஐ.,யினர் நடத்திய அதிரடி விசாரணையால் மாநில மக்களிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
ஊழல் மற்றும் பல்வேறு பிரச்னைகளால் சரிந்துள்ள தன்னுடைய இமேஜை மீட்டெடுக்கும் வகையில் மேற்கண்ட அறிவுரையை தனது கட்சி எம்.பி., எம்.பிக்களுக்கு கூறி உள்ளார்.