நட்சத்திர ஓட்டலில் ஆயுதங்களுடன் வந்த மதுபோதை கும்பல் : DJ Partyல் அனுமதி மறுக்கப்பட்டதால் மோதல்… கட்டையுடன் கும்பலை விரட்டிய பவுன்சர்கள்!
Author: Udayachandran RadhaKrishnan11 September 2022, 11:36 am
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள ஒரு ஸ்டார் ஓட் டல் முன் 4 பேர் உயர்ரக காரில் சென்று கொண்டிருந்தனர். காரை நிறுத்தி அதில் இருந்து இறங்கி 4 பேர் போதையில் தள்ளாடியபடி நேற்றிரவு ஓட்ட லுக்கு செல்ல முயன்றனர்.
அப்போது ஓட்டல் முன் இருந்த செக்யூரிட்டி விவரங்களை கேட்டார். அப்போது அவர்கள் டிஜே பார்ட்டியில் பங்கேற்க செல்வதாக கூறினர். அப்போது அவர் ஜோடியாக இருந்தால் பார்ட்டிக்கு செல்ல முடியும். உங்களுக்கு அனுமதி கிடையாது எனக்கூறினார்.
கோபமடைந்த அவர்கள் தகராறு செய்தனர். இதை பார்த்த ஓட்டல் நிர்வாகத்தை சார்ந்த பவுன்சர்கள் அங்கே குவிந்தனர். தகராறு செய்த 4 பேரையும் விரட்டி னர்.
இந்நிலையில் காருக்கு சென்ற 4 பேரும் கத்தியுடன் மீண்டும் ஓட்டலில் நுழைய முயன்றனர். அவர்களை பவுன்சிலர்கள் கட்டையுடன் விரட்ட முயன்றனர். இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.
இரு தரப்பினரும் ரோட்டின் முன் நின்று தகராறில் ஈடுபட்டனர். இதை சிலர் வீடியோ பதிவு செய்து சமூக வலை தளங்களில் வெளியிட்டனர். தகவல் அறிந்து வந்த ரேஸ்கோர்ஸ் போலீசார் 4 பேரையும் பிடித்து விசாரித்தனர்.
ஓட் டல் நிர்வாகத்தினரிடமும் விசாரணை நடத்தப்பட் டது. காரில் வந்தவர்கள் மீது ஓட்டல் நிர்வாகம் புகார் தர முன் வரவில்லை. போலீசார் காரில் வந்தவர்கள் போதையில் இருந்ததால், விவரங்களை பெற்று அனுப்பி வைத்தனர். இவர்கள் மீது நடவ டிக்கை எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.