கோவை மக்களே உஷார் ; கால்நடைகளை களவாடும் களவாணி… பசு மாட்டை திருடும் சிசிடிவி காட்சி..!!

Author: Babu Lakshmanan
15 September 2022, 9:24 am

கோவையில் மாடு திருடும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது

கோவை நீலாம்பூர் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் வழக்கறிஞர். இவர் வீட்டில் உள்ள தோட்டத்தில் 5 ஆண்டுகளாக மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் அவர் வீட்டில் நேற்று இரவு நாய்கள் சத்தமிட்டதால், அவரது மனைவி மற்றும் மகனிடம் சென்று பார்க்கச் சொல்லியுள்ளார். அங்கு சென்று பார்த்த போது கட்டி இருந்த மாடு காணவில்லை.

பின்னர் அவர்கள் பொருத்தி இருந்த சி.சி.டி.வி காட்சிகளை பார்த்து உள்ளனர். அதில் மாட்டை நபர் ஒருவர் அவிழ்த்து கொண்டு செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் அருகில் சென்று தேடிப் பார்த்துள்ளனர். இருட்டான பகுதியில் மாடு நின்று கொண்டு இருப்பதை கண்டு மீண்டும் அந்த மாட்டை தோட்டத்தில் கட்டி உள்ளனர்.

பின்னர் இது குறித்து சூலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து அருகில் உள்ள லாரி நிறுத்துமிடம் போன்ற பகுதிகளுக்கு சென்று தேடிப் பார்த்தனர். அந்த நபர் அங்கு இல்லை. இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து செல்வகுமார் கூறும் போது, ஏற்கனவே இது போன்று இரண்டு முறை மாட்டை திருடன் வந்துள்ளதாகவும் அவர்களை அப்பகுதி பொது மக்கள் உதவியுடன் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

  • vaadivaasal movie shooting starts on august ஒரு வழியாக தொடங்கப்போகுது வாடிவாசல்? ஒரு படத்துக்கு இவ்வளவு இழுபறியா?