‘வெந்து தணிந்தது காடு… நடிகர் சிம்புவுக்கு வணக்கத்த போடு’ : நெல்லை TO மும்பை.. ரசிகர்களை கவரும் கதை களம்..!!

Author: Babu Lakshmanan
15 September 2022, 10:00 am

தொடர் தோல்விகளை சந்தித்து வந்த நடிகர் சிம்புவின் திரையுலக வாழ்க்கை அவ்வளவுதானா..? என்று எல்லாம் சொல்லும் நிலை ஏற்பட்ட போது, வெங்கட் பிரபுவின் மாநாடு படம், அவருக்கு நல்ல Come Back-ஐ கொடுத்தது. விமர்சன ரீதியிலும் சரி வணிகரீதியிலும் சரி நல்ல பிளாக் பாஸ்டர் படமாக அந்த படம் அமைந்திருந்தது.

இதைத் தொடர்ந்து, சிம்புவுக்கு இனி வெற்றிப் படங்கள் அமையும் என்று அவரது ரசிகர்களிடையே நம்பிக்கை ஏற்பட்டது. இதனால், தற்போது வெளியாகியுள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல், விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா என இருபடங்களுக்கு பிறகு பல ஆண்டு இடைவெளியில் கௌதம் வாசுதேவ் மேனன் சிம்பு கூட்டணி இணைந்துள்ளது.

இந்தக் கூட்டணியையும் தாண்டி, தனது உடல் எடையை வெகுவாக குறைத்து, மீண்டும் உடல் எடையை அதிகப்படுத்தி, என கடுமையாக இந்தப் படத்திற்காக உழைத்துள்ளார்.
மேலும் சிறப்பாக எழுத்தாளர் ஜெயமோகன் கௌதம் வாசுதேவ் மேனன் உடன் முதல் முறையாக கைகோர்த்துள்ளார். அதேபோல கவிஞர் தாமரை பாடலாசிரியராக பணிபுரிந்துள்ளார். உடை வடிவமைப்பாளராக கௌதம் மேனனின் தங்கை உத்தரா மேனனும் பணிபுரிந்துள்ளனர்.

ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலர் பிரம்மாண்ட விழாவின் மூலம் வெளியிடப்பட்டது. இவ்வளவு அம்சங்களுடன் வெந்து தணிந்தது காடு திரைப்படம் தமிழகத்தில அதிகளவிலான திரையரங்குகளில் இன்று வெளியாகியுள்ளது. படத்தை பார்த்து விட்டு திரையரங்குகளில் வெளியே வரும் ரசிகர்கள் பாசிட்டிவ் கமெண்ட்ஸ்களை கொடுக்கின்றனர்.

முத்து என்கிற கதாநாயகனை சுற்றியே நகரும் கதைக்களத்தை கொண்டுள்ளது. நெல்லையிலிருந்து புலம்பெயர்ந்த தொழிலாளராக மும்பைக்கு செல்லும் முத்து, அங்கு கேங்ஸ்டர்களிடம் மாட்டிக் கொண்டு, அவர் சந்திக்கும் பிரச்சினைகளும், பின்னர் அனைத்தையும் எதிர்கொண்டு தானும் கேங்ஸ்டர் ஆக மாறும் கதைக்களத்தை முழுமையாக கொண்டுள்ளது இந்த படம்.

ஏற்கனவே சிம்பு தெரிவித்தபடி இதன் இடைவேளை மற்றும் இறுதி காட்சிகள் மாஸாக இருப்பதாகவும், படம் விறுவிறுப்பான கதைகளத்தை கொண்டுள்ளதாகவும் விமர்சனங்கள் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது. அதேவேளையில், தனி மனிதனின் வாழ்க்கை கதையை சுற்றி கதை நகர்வதால் அதனுடன் ஒன்றிப்போவது கொஞ்சம் கஷ்டமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. சிம்புவின் வழக்கமான மாஸ் பஞ்ச் டயலாக் எதுவும் இல்லாததால், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 596

    0

    0