மொத்த கண்ட்ரோலும் இபிஎஸ் கையில்… அதிமுக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் செய்த மிகப்பெரிய மாற்றம்..!!

Author: Babu Lakshmanan
15 September 2022, 11:39 am

அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் பேனர்களை அக்கட்சியினர் அகற்றினர்.

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்தது. ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என இரு அணிகளாக மீண்டும் பிளவு ஏற்பட்டது. கடந்த ஜுலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அன்றைய தினம் ஒ.பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க. அலுவலகத்துக்குள் அவரது ஆதரவாளர்கள் சென்றனர். அப்போது, இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு, அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்டது. இதில் அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த பேனர்கள் சேதமானது.

இதனையடுத்து, புதிய பேனர்களை அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதில், ஓ.பன்னீர் செல்வத்தின் புகைப்படங்கள் அகற்றப்பட்டுள்ளது. மேலும், புதிய பேனர்களில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது.

  • ags condition for producing str 50 பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?