இனி தரிசனம் செய்வது சுலபம்.. திருப்பதி பக்தர்களுக்காக தனியார் வங்கி செய்த சூப்பர் விஷயம் : நெகிழ்ந்து போன பக்தர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
15 September 2022, 1:36 pm

திருப்பதி ஏழுமலையானுக்கு கரூர் வைஸ்யா பேங்க் சார்பில் பக்தர்கள் பயன்பாட்டிற்கான ரூ. 30 லட்சம் மதிப்புள்ள 5 மின்சார வாகனங்கள் நன்கொடையாக அளிக்கப்பட்டது.

கரூர் வைசியா பேங்க் நிர்வாக இயக்குனர் ரமேஷ்பாபு இன்று காலை திருப்பதி மலையில் தேவஸ்தானத்திற்கு 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மின்சாரத்தால் இயங்கும் ஐந்து மோட்டார் வாகனங்களை நன்கொடையாக வழங்கினார்.

மோட்டார் வாகனங்களுக்கு ஏழுமலையான் கோவில் எதிரில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்ட பின் அவற்றிற்கு உரிய ஆவணங்கள் மற்றும் சாவிகள் ஆகியவற்றை அவர் தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டியிடம் ஒப்படைத்தார்.

தொடர்ந்து நிருபர்களுடன் பேசிய வங்கியின் நிர்வாக இயக்குனர் ரமேஷ் பாபு பக்தர்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பை இதன் மூலம் தேவஸ்தானம் எங்களுக்கு வழங்கி உள்ளது.

இதற்காக தேவஸ்தானத்திற்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம் என்று கூறினார்.
இது போன்ற வாகனங்களை தேவஸ்தான நிர்வாகம் திருப்பதி மலைக்கு வரும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் கோவிலுக்கு செல்லவும், கோவிலில் இருந்து வந்த பின் அவர்கள் பேருந்து நிலையம் அல்லது கார் பார்க்கிங் ஆகிய பகுதிகளுக்கு செல்லவும் பயன்படுத்தி வருகிறது.

  • Dragon Beat Vidaamuyarchi Movie Collection விடாமுயற்சி வசூலை விரட்டி முறியடித்த டிராகன்.. வெறும் 5 நாட்களில்..!!