யானையிடம் இருந்து எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர்… விடாது துரத்திய கொம்பன்… வைரலாகும் வீடியோ..!!
Author: Babu Lakshmanan16 September 2022, 2:08 pm
தனது கான்வாயை காட்டு யானை வழிமறித்ததால் உத்தரகாண்ட் முன்னாள் முதலமைச்சர் பாறை மீது உயிர் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகாண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத், கர்வால் மாவட்டத்திற்கு கோட்வார்-துகாடா நெடுஞ்சாலை வழியாக காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, காட்டு பகுதியில் சென்று கொண்டிருந்த போது, திடீரென அவர்களின் கான்வாயை ஒற்றை காட்டு யானை வழிமறித்தது.
சிறிது நேரம் அங்கேயே உலாவிய காட்டு யானை, சற்று ஆக்ரோஷமாக காணப்பட்டது. அதுமட்டுமில்லாமல், அவர்களின் வாகனங்களை நோக்கி, அந்த காட்டு யானை ஆவேசமாக வந்தது.
இதனை பார்த்த முன்னாள் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத்தை, அவரது பாதுகாவலர்கள் அங்கிருந்த உயர்ந்த பாறையின் மீது அழைத்துச் சென்றனர். அவர்கள் பாதை மீது ஏறிய போதும், அந்தக் காட்டு யானை அவர்களை விட்டு நகரவில்லை. அங்கிருந்தவர்களை அச்சப்படுத்தும் விதமாகவே, காட்டு யானை நின்று கொண்டிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாமல் மீண்டும் காட்டுக்குள்ளேயே சென்றது. ஆனால் யானையைக் கண்டு பயந்து போன அனைவரும் அங்கிருந்த உயரமான பாறையில் ஏறினர்.