இனி தனிக்கட்சி வேண்டாம்… மோடியோடு ஜோடி போடும் முன்னாள் முதலமைச்சர் : நேரடியாக பாஜகவில் இணைய முடிவு!!
Author: Udayachandran RadhaKrishnan16 September 2022, 4:52 pm
பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங், சட்டசபை தேர்தலுக்கு முன் காங்கிரஸ் மேலிடத்துடன் ஏற்பட்ட மோதல் காரணமாக பதவி விலகியதுடன், பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற கட்சியை துவக்கி பா.ஜ.க,உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார்.
ஆனால், தேர்தலில் தோல்வி தான் கிடைத்தது. இதன் பின்னர் சிறிது காலம் ஓய்வில் இருந்த அமரீந்தர் சிங் சமீபத்தில், டில்லியில் மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ.க, மூத்த தலைவருமான அமித்ஷாவை சந்தித்து பேசியிருந்தார்.
தேச பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக அமரீந்தர் சிங் கூறியிருந்தார். இந்நிலையில் பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பிரித்பால் சிங் பலியவால் கூறுகையில், வரும் செப்.,19ஆம் தேதி அமரீந்தர் சிங், தனது கட்சியை பா.ஜ.க, உடன் இணைத்து விட்டு, அக்கட்சியில் இணைய உள்ளதாக கூறியுள்ளார்.