பூட்டிய வீட்டுக்குள் இருந்து வந்த துர்நாற்றம்… கதவை உடைத்து பார்த்த போது காத்திருந்த அதிர்ச்சி : கள்ளக்காதலா? போலீசார் விசாரணை!

Author: Udayachandran RadhaKrishnan
16 September 2022, 9:08 pm

பூட்டிய வீட்டுக்குள் இருந்து வந்த துர்நாற்றத்தால் சந்தேகமடைந்த பொதுமக்கள் கதவை உடைத்து பார்த்த போது காத்திருந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த வெட்டுப்பட்டான் குட்டை பகுதியில் பூட்டிய வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசி உள்ளது.

இதனை அடுத்து சந்தேகமடைந்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து வந்த போலீசார் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் கொலை செய்யப்பட்டு இறந்து கிடப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து பெண்ணின் உடலை மீட்ட பல்லடம் போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை மேற்கொண்ட போலீசார் அந்த வீட்டில் வாடகைக்கு குடியிருந்த ராஜா என்ற நபர் என்பது தெரிய வந்தது.

ராஜா தான் கொலையாளியா என சந்தேகித்த போலீசார் தலைமறைவாகி உள்ள ராஜாவைத் தேடி வருகின்றனர். மேலும் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பூட்டிய வீட்டிற்குள் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Meenakshi Chaudhry மீனாட்சி செளத்ரிக்கு அரசாங்கம் அடித்த ஆர்டர்? உண்மை நிலவரம் என்ன?