தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா : மீண்டும் பதிவான பலி எண்ணிக்கை… டாப்பில் சென்னை, கோவை : இன்றைய முழு நிலவரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
16 September 2022, 9:47 pm

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் புதிதாக 247 ஆண்கள், 216 பெண்கள் என மொத்தம் 463 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னையில் 103 பேர், கோவையில் 60 பேர், செங்கல்பட்டில் 46 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி, தர்மபுரி மாவட்டங்களில் பாதிப்பு இல்லை, அவற்றை தவிற அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது.

மேலும், 12 வயதுக்குட்பட்ட 28 குழந்தைகளுக்கும் , 60 வயதுக்கு மேற்பட்ட 111 முதியவர்களுக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் 438 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளாகி 4 ஆயிரத்து 820 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 2 ஆயிரத்து 277 பேரும், கோவையில் 479 பேரும், செங்கல்பட்டில் 295 பேரும் சிகிச்சையில் இருக்கின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  • members in tn assembly discussed about kadhalikka neramillai movie இந்த படத்தை தடை செய்ய வேண்டும்! சட்டசபையில் எழுந்த விவாதம்- இப்படி எல்லாம் நடந்திருக்கா?