2024 நாடாளுமன்ற தேர்தலில் மதுரையில் போட்டியிடுகிறார் பிரதமர் மோடி? வைரலாகும் போஸ்டரால் அரசியல் கட்சியினரிடையே பரபரப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan17 September 2022, 11:15 am
2024 ஆம் ஆண்டிற்கான பாராளுமன்ற தேர்தலில் மதுரை தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி வெற்றி என ஒட்டபட்டுள்ள போஸ்டர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
2024 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மதுரை பாராளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்ட பிரதமர் நரேந்திர மோடி வெற்றி என நரேந்திர மோடியின் பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தொடர்ந்து வருகிற 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் மதுரை தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட வேண்டும் எனவும் பாரதிய ஜனதா கட்சினர் விருப்பம் தெரிவிக்கும் வகையில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.