தந்தை பெரியாரின் உருவப்படத்திற்கு முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மரியாதை : மலர் தூவி அஞ்சலி செலுத்திய அதிமுக நிர்வாகிகள்!!
Author: Udayachandran RadhaKrishnan17 September 2022, 1:02 pm
இதய தெய்வம் மாளிகையில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 144 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப்படத்திற்கு முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மலர் துவி மரியாதை செய்தார்.
இதில் கோவை மாநகர் மாவட்ட செயலாளரும் வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் கே அர்ஜுனன் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே ஆர் ஜெயராமன், கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினருமான பி.ஆர்.ஜி.அருண்குமார், கழக அமைப்பு செயலாளரும், மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினருமான எ.கே.செல்வராஜ் , முன்னாள் அமைச்சர் செ.மா வேலுச்சாமி, சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.கந்தசாமி உட்பட அதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் கலந்து கொண்டு பகுத்தறிவு பகலவனுக்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.