ஓணம் பம்பரால் ஒரே நாளில் மாறிய வாழ்க்கை : வேலைக்காக வெளிநாடு செல்ல இருந்த கேரள ஆட்டோ ஓட்டுநருக்கு ரூ.25 கோடி பரிசு…!!

Author: Udayachandran RadhaKrishnan
19 September 2022, 8:36 am

கேரளா ஓணம் பம்பர் 2022 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் அனைவருக்கும் ஆச்சரியம் ஏற்பட்டது. ஆட்டோ டிரைவர் ஒருவருக்கு ரூ. 25 கோடி ஜாக்பாட் பரிசு கிடைத்தது.

ஓணம் பம்பர் முடிவுகள் கேரள மாநில லாட்டரி துறையால் அறிவிக்கப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணிக்கு அறிவிக்கப்பட்ட இந்த லாட்டரி சீட்டு குலுக்கலில் திருவனந்தபுரத்தில் விற்கப்பட்ட டிக்கெட்டுக்கு முதல் பரிசு ரூ 25 கோடி அறிவிக்கப்பட்டது.

25 கோடி ரூபாய் முதல் ரூ 1,000 வரை என பலதரப்பட்ட பரிசுகள் அறிவிக்கப்பட்டன. முதல் பரிசான ரூ.25 கோடியை திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் வென்றார்.

இரண்டாவது பரிசான ரூ.5 கோடியை கோட்டயத்தைச் சேர்ந்த ஒருவருக்குக் கிடைத்தது. ஓணம் பம்பர் லாட்டரி முடிவு அறிவிக்கப்படதும் அனைவருக்கும் பரபரப்ப்பு ஏற்பட்டது

டி.வி.எம் ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநர் மற்றும் கூலியான அனூப் என்பவர் 25 கோடி ரூபாய் வென்றுள்ளார். 32 வயதான அனூப், இந்த லாட்டரி டிக்கெட்டை திருவனந்தபுரத்தில் வாங்கியிருக்கிறார். திருவனந்தபுரத்தில் உள்ள பழவங்காடி பகவதி ஏஜென்சி இந்த லாட்டரி டிக்கெட்டை விற்பனை செய்துள்ளது.

அனூப் பம்பர் குலுக்கல் லாட்டரி சீட்டை நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு வாங்க கடைக்கு சென்றுள்ளார். அப்போது அவரிடம் ரூ.500 இல்லை. பணம் குறைவாக இருந்ததால், வீட்டுக்கு வந்து சேமித்து வைத்து இருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்ைத எடுத்து சென்று லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார்.

அந்த லாட்டரி சீட்டுக்குதான் தற்போது ரூ.25 கோடி பரிசு கிடைத்து உள்ளது.அவருக்கு வருமான வரி, ஏஜெண்டு கமிஷன் போக ரூ. 15.75 கோடி கிடைக்கும் என்று லாட்டரி உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் மலேசியிவில் சமையல் வேலை செய்ய செல்ல திட்டமிட்டிருந்ததாகவும், இனி இங்கேய ஹோட்டலை கட்ட வேண்டும், நல்ல வீடு கட்ட வேண்டும் என தனது விருப்பத்தை தெரிவித்தார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 717

    2

    2