ஆனைக்கட்டி அருகே SILENT VALLEY வனப்பகுதியில் கிடந்த யானையின் சடலம் : மலையில் இருந்து தவறி விழுந்து பலியான பரிதாபம்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 September 2022, 1:18 pm

கோவை : அனைகட்டி அடுத்த தமிழக கேரள எல்லையில் மலையில் இருந்து தவறி விழுந்து பெண் யானை பலியான சம்பவம் இயற்கை ஆர்வலரிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் ஆனைகட்டி அடுத்த கேரள பகுதியான அட்டப்பாடி, அகலி, சைலெண்ட் வேலி பகுதியில் காட்டு யானைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

இந்த யானைகள் உணவிற்காகவும் வலசை செல்லவும் தமிழக- கேரள வனப்பகுதிக்குள் மாறி மாறி வருவது வழக்கம். இந்நிலையில் அட்டப்பாடி உள்ள மலை பகுதி வழியாக யானை கூட்டம் ஒன்று நேற்று இரவு வந்துள்ளது.

அப்போது மலையின் விளிம்பில் யானை கூட்டம் சென்றபோது கால் தவறி பெண் யானை ஒன்று மலை பாதையில் விழுந்தது. இதனால் யானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அட்டப்பாடி வனத்துறையினருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து இன்று காலை அங்கு சென்று வனத்துறையினர் யானையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

மேலும் வேறு ஏதாவது யானை இதை போன்று தவறி விழுந்து உள்ளதா எனவும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மலைப்பாதையில் யானை தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 444

    0

    0