தமிழக மீனவர்கள் 8 பேர் கைது : எல்லை தாண்டி மீன் பிடித்ததாக சிறைபிடித்தது இலங்கை கடற்படை!!
Author: Udayachandran RadhaKrishnan20 September 2022, 8:41 am
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகை மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேஷன் துறை கடற்படை முகாமிற்கு இலங்கை கடற்படை அழைத்து சென்றுள்ளது.
காரைநகர் கடற்பகுதியில் வைத்து 8 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை அவர்களின் ஒரு படகையும் பறிமுதல் செய்துள்ளது.