இபிஎஸ் போட்ட செம பிளான்… டெல்லியில் நடக்கும் முக்கிய பேச்சுவார்த்தை : ஓகே சொன்ன அமித்ஷா.. ஷாக்கில் தமிழக அரசியல் கட்சிகள்!!

Author: Udayachandran RadhaKrishnan
20 September 2022, 10:33 am

அ.தி.மு.க.வில் பொதுக்குழு நடத்தி எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்தது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியது.

அதேபோல் அ.தி.மு.க. தலைமை அலுவலக சாவி எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கிலும் அவருக்கு சாதமாகவே சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு வெளியானது.

இந்நிலையில் நேற்று இரவு 9 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றார்.

இந்த நிலையில் டெல்லியில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று காலை 11 மணிக்கு எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவில் நிலவி வரும் அரசியல் சூழல் குறித்து அமித்ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி பேச வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அமித்ஷாவை சந்தித்த பின் இன்று மாலையே சென்னை திரும்ப உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 460

    0

    0