திமுக எம்பி ஆ. ராசா பேச்சுக்கு தொடரும் எதிர்ப்பு : அவிநாசியில் இந்து முன்னணி சார்பாக கடையடைப்பு போராட்டம்!!
Author: Udayachandran RadhaKrishnan20 September 2022, 10:47 am
திருப்பூர் : ஆ.ராசா பேச்சை கண்டித்து இந்து முன்னணி சார்பாக அவிநாசியில் கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.
நீலகிரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் ஆ.ராசா மனுஸ்மிருதியில் இந்துக்கள் குறித்து கூறப்பட்ட கருத்துக்கள் குறித்து பேசியதை கண்டித்து தமிழக முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடந்து வருகிறது.
அந்த வகையில் நீலகிரி பாராளுமன்ற தொகுதி முழுவதும் இன்று முழு கடையடைப்பு போராட்டம் நடத்த இந்து முன்னணி அறிவித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. தரப்பில் கடைகள் அடைக்க வேண்டியதில்லை என்று பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் மத்தியில் அறிவுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் அவிநாசி, திருமுருகன்பூண்டி, சேயூர், தெக்கலூர், தேவராயன்பாளையம், காசிகவுண்டன்புதூர் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் மருந்து மற்றும் பால் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் தவிர பிற கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.
தி.மு.க. வினர் கடைகளை திறக்கச் சொல்லி வணிகர்களிடம் அறிவுறுத்தி வந்தனர். மேலும், அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காதவாறு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.