குத்தகைக்கு விட்ட கடையை காலி செய்ய மறுத்து திமுக பிரமுகர் மிரட்டல் : தற்கொலைக்கு முயன்ற கடை உரிமையாளரால் பரபரப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan20 September 2022, 10:56 am
குத்தகைக்கு விட்ட கடையை காலி செய்ய மறுத்த உடன்பிறப்புகளால் தீக்குளிக்க முயன்ற கடை உரிமையாளரின் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சின்னக்கடை வீதியில் அஸ்கர் அலி என்பவரின் தந்தை, திமுக பிரமுகர் சித்திக் பாஷாவின் தந்தைக்கு கடையை குத்தகைக்கு விட்டுள்ளார்.
இந்நிலையில் அஸ்கர் அலி குத்தகை பணத்தை திருப்பி தந்து கடையை காலி செய்ய சொல்லியுள்ளார். ஆனால் திமுக பிரமுகர் அந்த கடையை காலி செய்ய மறுத்ததாக தெரியவருகிறது.
அஸ்கர் அலி அளித்த புகார் மனுவின் மீதான் உத்தரவின் அடிப்படையில் வருவாய்த் துறையினர் மற்றும் காவல் துறையினர் கடைக்கு சீல் வைக்க வந்துள்ளனர். அவர்களை சீல் வைக்க விடாமல் சித்திக் பாஷா தடுத்துள்ளார்.
இந்த சம்பவத்தால் மன உளைச்சலுக்கு ஆளான அஸ்கர் அலி திடீரென தன் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொள்ள முயன்றுள்ளார். அதனை கண்ட காவல்துறையினர் மற்றும் அருகில் இருந்தவர்கள் அவர் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றியுள்ளனர்.
வருவாய்த் துறையினர் மற்றும் போலீசார் கடைக்கு சீல் வைத்துவிட்டு திமுகவினரின் அழுத்தம் காரணமாக சாவியை தன்னிடம் ஒப்படைக்காமல் சென்றுள்ளனர் என அஸ்கர் அலி குற்றம்சாட்டியுள்ளார்